தமிழகத்திலிருந்து இலங்கைக்கு விரைவில் அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவிப்பு!
Wednesday, March 9th, 2022
தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை இந்தியாவினால் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது
இதுவே இந்தியாவின் தமிழகத்திலிருந்து இலங்கைக்கான முதலாவது உல்லாச கப்பல் சேவை என அச்சபையின் தலைவர் கிமார்லி பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் முதலாவது பயணம் சென்னையில் இருந்து ஆரம்பிக்கப்படும் என்றும் குறித்த கப்பலில் தங்கும் அறை வசதி உள்ளடங்கலாக பயணிகளின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கப்பலில் பயணிக்க விரும்பும் பயணிகள் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றிருப்பது அவசியம் என்பதுடன் தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையையும் கொண்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வடபகுதி கடற்தொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி, பிரதமரை விரைவில் சந்தித்துப் பேச்சு!
முச்சக்கரவண்டிகளை மீற்றர் கட்டணமில்லாமல் இயக்க முடிவு!
சமூக சமனிலையை உறுதிப்படுத்துவதே நோக்கமாகும் - ஜனாதிபதி!
|
|
|


