தனியார் வகுப்புகள் 31ஆம் திகதிக்கு பின்னர் தடை!
Wednesday, July 18th, 2018
எதிர்வரும் க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்களை இம்மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பீ.பூஜித தெரிவித்துள்ளார்.
அதன்படி, அன்று நள்ளிரவுக்கு பின்னர் தனியார் வகுப்புக்களை நடாத்துவது, பிரச்சாரங்கள் மேற்கொள்வது மற்றும் கருத்தரங்குகள் நடாத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நிறைவு பெறவுள்ளதோடு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் 321,469 பேர் விண்ணப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இரண்டு மாதங்களில் 16 இன ரீதியான வன்முறை சம்பவங்கள் - காவல்துறை ஊடக பேச்சாளர்!
வடக்கிற்கு புதிய பொருளாதார திட்டம் - அபிவிருத்தியின் வேகம், மக்களின் அர்ப்பணிப்பிலேயே தங்கியுள்ளது –...
கிளிநொச்சியில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவ...
|
|
|


