தனியார் பேருந்து ஊழியர்களுக்கு எதிராக 125 முறைப்பாடுகள்

புத்தாண்டு காலப்பகுதியில் தனியார் பேருந்து ஊழியர்களுக்கு எதிராக 125 முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயலாளர் எம்.ஏ.பி.ஹேமசந்திர தெரிவித்தார். குறித்த பஸ் ஊழியர்கள் தவறு செய்தமை உறுதி செய்யப்பட்டால் 3 மாதங்களுக்கு அவர்களின் பேரந்தகளுக்கான போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இரத்து செய்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் கிடைக்கபெற்ற முறைப்பாடுகளில் சில பொய்யானவை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயலாளர் எம்.ஏ.பி.ஹேமசந்திர மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
அடையாளம் தெரியாதவர்களால் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி!
யாழ் மாநகரின் புதிய முதல்வர் யார்? இன்று வாக்கெடுப்பு!!
கோழி இறைச்சி - முட்டை விலைகளில் வீழ்ச்சி - தீர்வை வரியின்றி விலங்கு உணவை இறக்குமதி செய்ய நிதி அமைச்ச...
|
|