துறைமுக தொழிற்சங்கத்தினால் சட்டப்படி வேலை செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு!

Friday, January 29th, 2021

துறைமுக தொழிற்சங்கம் இன்று மதியம் 12 மணி முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உடன்படிக்கையில் நூறு வீதம் உரிமம் துறைமுக அதிகார சபைக்கு வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் 23 துறைமுக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கூடி கிழக்கு முனையத்தின் உரிமையை 100 சதவீதம் துறைமுக அதிகாரசபையின் கீழ் இல்லாவிடின் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்க  தீர்மானிக்கப்பட்ட நிலையில் இன்று தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

Related posts:


விரைவில் எரிபொருளின் விலைகளில் திருத்தம் - மக்களுக்கு நிவாரணம் வழங்க மின்சாரம் கட்டணமும் குறைக்கப்பட...
யாழ் - சிறைச்சாலையில் புனரமைப்பு செய்யப்பட்ட கலந்துரையாடல் மண்டபம் சிறைச்சாலை ஆணையாளரால் திறந்துவைப்...
இலங்கையில் அமெரிக்க டொலர் சார்ந்த் பொருளாதாரத்தை குறைப்பதற்கான நகர்வுகளில் அரசாங்கம் நடவடிக்கை!