தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகை – போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
Friday, June 18th, 2021
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுமென போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதற்கமைய சலுகை முறைமைகள் குறித்து அடுத்த வாரம் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேருந்து உரிமையாளர்கள் பொது மக்கள் மீது சுமையினை ஏற்படுத்தாத வகையில் சலுகைகளை வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கறுப்பு ஜூலை கற்றுத்தந்த பாடங்கள்!
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
உங்களுக்கு வீடு, நாட்டிற்கு நாளை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் வசதி குறைந்த மக்களுக்கு வீடுகள் - தேசி...
|
|
|


