தனியார் துறையில் பணியாற்றும் பெண்களுக்கும் பிரசவ விடுமுறை?
Friday, August 26th, 2016
நாட்டில் தனியார் துறையில் பணியாற்றும் தாய்மார்களுக்கு பிரசவ விடுமுறையை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தற்போது அரச சேவையில் பணியாற்றும் தாய்மார்களுக்கு 06 மாதங்கள் பிரசவ விடுமுறை வழங்கப்படுவதுடன், அதன் பின்னர் சம்பளம் அற்ற விடுமுறை பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது.
அதன்படி இந்த நடைமுறையை தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கும் பெற்றுக் கொடுப்பது சம்பந்தமாக அமைச்சரையில் பேசுவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறினார். தாய்ப்பால் ஊட்டுவதன் முக்கியத்துவம் சம்பந்தமாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கான இறுதி விண்ணப்ப தினம் இன்று!
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 25 பேர் பலி!
ஐந்து பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை - பாவனையாளர் அதிகார சபை!
|
|
|


