தனியார் துறையினரின் முறைப்பாடுகளுக்கு விரைவில் தீர்வு – தொழில் திணைக்களம் தெரிவிப்பு!

கொரோனா இரண்டாம் அலைக்கு மத்தியில் தனியார் துறை தொழிலாளர்களினால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தர தொழில் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மாவட்ட செயலாளர் அலுவலகங்களினூடாக குற்றச்சாட்டுகள் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரபாத் சந்த்ரகீர்த்தி தெரிவித்தார்.
கிடைத்த முறைப்பாடுகளில் சம்பளம் வழங்கப்படாமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், சம்பள பிரச்சினை தொடர்பில் தனியார் துறை நிறுவன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் கோவை அனுப்பப்பட்டுள்ளதாக தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரபாத் சந்த்ரகீர்த்தி தெரிவித்துள்ளமை குறிப்பித்துக்கது.
Related posts:
அதிபர்கள் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு இதுவரையில் வழங்கப்படவில்லை - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்!
வாகன விபத்துக்களால் தினமும் 15 பேர் பலி - 5 மாதங்களில் 1514 பேர் உயிரிழப்பு!
புதிய ஆண்டு தொடக்கத்தில் டெங்குக் காய்ச்சல் அதிகளவில் பரவும் அபாயம் - சுகாதார பூச்சியியல் அதிகாரிகள்...
|
|