தனியார்துறை தொடர்பில் தொழில் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வறிக்கை நாளையதினம் துறைசார் அமைச்சரிடம் கையளிப்பு!
Sunday, May 17th, 2020
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தனியார்துறை நிறுவனங்கள் தொடர்பில் தொழில் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வறிக்கை நாளையதினம், சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளதாக குறித்த விடயம் தொடர்பில் தொழில் ஆணையாளர் விமலவீர தெரிவித்தள்ளார்.
நாட்டின் தனியார்துறை வர்த்தக நிறுவனங்களின் நிலமைகள், ஊழியர்களின் பாதுகாப்பு என்பன தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளுதல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த நிறுவனங்களுக்கு அவசியமான நிவாரணங்களை ஏற்பாடு செய்வது தொடர்பில் ஆராய்வதற்கான பணிகளை அரசாங்கத்திற்கு இலகுபடுத்தும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
A/L மாணவர்களுக்கான மேலதிக பயிற்சி வகுப்புகளுக்கு தடை!
சட்டவிரோத மீன்பிடிக்காக எல்லைதாண்டிய இந்திய இழுவை படகு குருநகர் மீனவர் படகு மீதி மோதியதில் அடாவடி...
இந்தியாவுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இலங்கையை வேறொரு நாடு பயன்படுத்த இடமளியோம் - இராஜாங்க அமைச...
|
|
|


