தனியாரிடமிருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி!
Thursday, October 5th, 2017
தனியார் துறையிடம் இருந்து விரைவில் 9 பில்லியன் ரூபாவிற்கு மின்சாரத்தை பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சாரத்துறை அமைச்சினால் இதற்கான யோசனை அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.வறட்சியான காலநிலை காரணமாக மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த இந்த அமைச்சரவை யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக இவ்வாறு தனியார் துறையினரிடம் இருந்து மின்சாரம் பெறப்பட்ட போதும், தொடர்ந்தும் மின்சாரம் வழங்க குறித்த நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ள நிலையிலேயே, 9 பில்லியன் ரூபாய்க்கு மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மின்சாரத்துறை பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
கட்டாருடன் இலங்கை 07 உடன்படிக்கைகளில் கைச்சாத்து!
பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!
கடந்தாண்டு இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 13 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு - ஏற்றுமதி அபிவிருத்த...
|
|
|


