தனிமைப்படுத்தல் விதிகளை மீறி முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை!
Tuesday, July 27th, 2021
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பொது இடங்களில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் ஆராயுமாறு நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் தனுஷ்க தில்ஷான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்திருந்தார்.
இதற்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு எதிராக நோய் பரவும் வகையில் செயற்படுபவர்கள் குறித்து ஆராயப்படும் என காவல்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
ஒரு வித காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு
பாரிய தீ பரவல் – வத்தளையில் 4 வீடுகள் பூரணமாக எரிந்து நாசம்!
இந்தியா அளித்துவரும் உதவிகள் அனைத்துக்கும் நன்றி கூறிய பிரதமர் !
|
|
|


