தனிமைப்படுத்தல் விதிகளை மீறினால் ஆறு மாதக்கால சிறைத்தண்டனை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
Monday, July 12th, 2021
நடைமுறையிலள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 190 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம்முதல் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 449 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் சுமார் 41 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. எஞ்சிய சுமார் 8, ஆயிரம் பேருக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகும் நபர் ஒருவருக்கு, 10 ஆயிரம் அபராதமும், 6 மாத சிறைத் தண்டனையும் நீதிமன்றினால் விதிக்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மந்திகை மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!
கர்ப்பிணித்தாய்மார்கள் தமது வதிவிடங்களை உறுதி செய்யவும்!
சோளம் பற்றாக்குறை: திரிபோஷா தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது!
|
|
|


