தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 755 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!

Monday, May 31st, 2021

அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 755 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்  பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்..

கடந்த ஒக்டோபர் மாதம்முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தனிமைப்படுத்தல் விதிகள் தொடர்பான சுற்றிவளைப்புகளின் அடிப்படையில் இதுவரையில் 18 ஆயிரத்து  55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம் நேற்றையதினம் மேல்மாகாணத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி வீதிகளில் பயணித்த 6 முச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டதுடன் அதில் பயணித்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேல் மாகாணத்திலிருந்து வெளியேறக்கூடிய 14 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் சுற்றிவளைப்புகளின் போது 84 பேர் அநாவசியமாக மாகாண எல்லைகளை கடக்க முயற்சித்த வேளை அவர்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிக்கிடத்தக்கது.

Related posts: