இதுவரை அவசர சேவைகளில் ஈடுபட்டுவந்த காவுவண்டிகள் இனி நோயாளரை இடமாற்றும்!

Sunday, January 13th, 2019

இந்திய அரசால் வழங்கப்பட்ட நோயாளர் காவு வண்டிகள் அவசர சேவைக்கும் ஏற்கனவே சேவையில் உள்ள நோயாளர் காவுவண்டிகள் நோயாளர்களை இடமாற்றவும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன என்று மாகாண சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது.

திடீர் மருத்துவ தேவைகளான விபத்து, நெஞ்சுவலி, பிரசவம், நஞ்சருந்தல், விசப் பூச்சிகள் கடி போன்ற பல்வேறு தேவைகளுக்கும் அவசர நோயாளர் காவு வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

மருத்துவமனைகளுக்கு இடையே நோயாளர்களை மாற்றம் செய்வதற்கு வண்டிகள் போதுமானதாக இருக்கவில்லை. கடந்த வருடம் ஜீலை மாதம் 20 ஆம் திகதி நோயாளர் காவுவண்டிகளை இந்திய அரசு வழங்கியது.

யாழ்ப்பாணம் 7, கிளிநொச்சி 4, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகியவற்றுக்குத் தலா 3 வீதம் வடக்கு மாகாணத்துக்கு 20 வண்டிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இவை தற்போது அவசர சேவையில் மட்டும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆகவே முன்னர் மருத்துவமனைகளின் ஊடாகச் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட அவசர நோயாளர் காவுவண்டிகள் மருத்துவமனைகளுக்கு இடையே நோயாளர்களை மாற்றம் செய்தல் உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: