அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் இரண்டு வாரத்தில் 30 க்கு மேற்பட்ட கிராமங்களில் பழமரக்கன்றுகளை விநியோகித்த கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு!

Monday, January 25th, 2021

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பழமரக்கன்று விநியோகத்தில் அந்தந்தக் கிராமசேவையாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் இணைந்து நேரடியாக ஈடுபட்ட கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவினர், மாவட்டத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து மக்களுக்கு தெளிவூட்டும் செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளனர்.

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுக்கமைய, ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் மற்றும் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் ஆகியோர் இந்தச் செயற்றிட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் கிராம ரீதியாக மனைப்பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு செயற்றிட்டத்தில் நேரடியாக பங்கேற்றுவரும் ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர்கள், பழமரக்கன்று விநியோகத்துடன், அவற்றை உரிய முறையில் நட்டுப் பராமரித்து சுயதேவைகளையும் பூர்த்திசெய்து வருமானமீட்டக்கூடிய வழிவகைகள் குறித்தும் வழிகாட்டி வருகின்றனர்.

அத்துடன் வெறுமனே உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதுடன் நின்றுவிடாமல், பெறுமதிசேர் உற்பத்திகள் மூலம் கூடுதல் இலாபமீட்டக்கூடிய வகையில் கைத்தொழில்துறைகளை மேம்படுத்துவது தொடர்பாகவும், உள்ளூர் உற்பத்திகளுக்கான தேசிய மற்றும் வெளிநாட்டுச் சந்தைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் இந்தச் சந்திப்புக்களில் மக்களுக்கு அவர்கள் தெளிவூட்டி வருகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக எழுந்துள்ள சவாலான சூழலை சாதகமாக்கி, எமது பாரம்பரிய உணவு மற்றும் மருத்துவப் பழக்கவழக்கங்களுக்கு மீளத் திரும்புவதன் அவசியம் குறித்தும், அதனுடன் இணைந்ததாக விவசாயப் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பது குறித்தும் ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர்கள் மக்களுக்கு விளக்கமளித்து வருகின்றனர்.

இவற்றுக்கு மேலதிகமாக, ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயம், கைத்தொழில் உற்பத்தி, கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டுத்திட்டம், வீதிகள் உள்ளிட்ட மக்களுடைய ஏராளமான பிரச்சினைகள் குறித்தும் பொதுமக்கள் இணைப்பாளர்களுடன் கலந்துரையாடி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பமாகவும் இந்த முன்னெடுப்பு அமைந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts:


2 ஆவது நாளாகவும் 5 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது - இராஜாங்க அமைச்சர் சன்ன...
போதுமான அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ளன - அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்க...
அரசாங்கத்துடன் இணைய முன்வருபவர்களுக்கு எனது அமைச்சை வழங்கத் தயார் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்...