தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 509 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய மேலும் 509 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த காலப்பகுதியில் 25 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையான காலத்திற்குள் 76 ஆயிரத்து 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரதமரின் புதிய செயலாளராக எஸ் . அமரசேகர நியமனம்!
பகிடிவதை: பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்!
தொழிற்சங்கங்களுடன் இணக்கமாக செயற்படுமாறு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்து!
|
|