தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் பலர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 502 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி , தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 56 ஆயிரத்து 798 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் 13 இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள வீதித் தடையில் நேற்றைய தினம் 757 வாகனங்களும் மற்றும் ஆயிரத்து 509 நபர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அட்டை விநியோகத்தின் போதான நிபந்தனையொன்று தளர்வு!
நவாலிப்படுகொலையின் 23வது நினைவுநாள் இன்று!
சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க புதிய திட்டம்!
|
|