தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 613 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல்!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேலும் 613 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 74 ஆயிரத்து 507 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் மேல் மாகாணத்தில் அமைக்கப்பட்ட 13 சோதனைச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது ஆயிரத்து 804 பேர் அவர்கள் பயணித்த ஆயிரத்து 168 வாகனங்களுடன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டிய பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த நடவடிக்கைகளின் போது 104 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
மேற்பார்வையாளர் மரணம்!
உங்கள் பிள்ளை எத்தனை பேரை வெட்டியவர் தெரியுமா ? - பெற்றோரை கண்டித்த பொலிஸார்!
சுற்றிவளைப்புகள் தொடர்பிலான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்வதனை தவிர்க்கவும் – இராணுவம்!
|
|