தனிப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் உரிமங்களை புதுப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்து!
Thursday, September 28th, 2023
தனிப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்கள் உரிமங்களை புதுப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, துப்பாக்கி உரிமங்களை எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் புதுப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விபரங்களை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.defence.lk) பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமம் புதுப்பித்தல் நடவடிக்கை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் மேற்கொள்ளப்படாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
காலக்கெடுவிற்குப் பிறகு செய்யப்படும் எந்தவொரு புதுப்பித்தல்களும் அபராதம் அல்லது சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது
000
Related posts:
|
|
|


