தனிநபர்களின் நிவாரணத்திற்காக வழங்கப்பட்டிருந்த காலத்தை நீட்டிக்க இலங்கை மத்திய வங்கி முடிவு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு தரப்பினரின் இன்னல்களை கருத்திற் கொண்டு, வணிக மற்றும் தனிநபர்களின் நிவாரணத்திற்காக வழங்கப்பட்டிருந்த காலத்தை நீட்டிக்க இலங்கை மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.
அத்தகைய நபர்கள் மற்றும் வணிகங்கள் கடன் நிவாரணம் மற்றும் மூலதனக் கடன்களுக்கு 4 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கால வரையறை ஏப்ரல் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
அதேபோல, குறித்த காலத்தைக் கடந்துள்ள 5 இலட்சத்திற்கு குறைந்த அளவிலான காசோலைகள் அனைத்தும் இம்மாதம் 15 ஆம் திகதி வரை நீட்டிக்கவும் இலங்கை மத்திய வங்கி முடிவு தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது..
Related posts:
அஸ்கிரிய பீடாதிபதி நியமனம்..!
வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!
அனைத்து ஆசிரியர் கலாசாலைகளையும் ஒன்றிணைத்து தேசிய ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக் கழகம் உருவாக்க நடவடிக்...
|
|