தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கடும் சட்டம் – மீறினால் 50000 ரூபா அபராதம்!
Friday, July 17th, 2020
பயணிகள் நடைபாதை மற்றும் வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது இன்றுமுதல் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை கண்காணிக்க பொலிஸார் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் திணைக்களத்தின் சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.. அத்துடன் இந்த வீதி சட்ட ஒழுங்கினை மீறும் சாரதிகள் மீது 50 000 ரூபா வரை தண்டப்பணம் விதிக்கப்படும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதுடன், மக்களிடமிருந்து தூர விலகி நிற்காமல் செயற்படுங்கள்” - இராஜாங்...
பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி அடுத்த வாரம் ஆரம்பம்!
மழையுடன் கூடிய காலநிலை - சிறு பிள்ளைகள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவி வருவதாக சிறுவர் வைத்திய நிபுண...
|
|
|


