தடையை நீக்குவோம் – அமைச்சர் நாமலின் அறிவிப்பு!

தேசிய மல்யுத்த விளையாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தடை நீக்கப்பட்ட பின்னர் மல்யுத்தம் மற்றும் அது சார்ந்த விளையாட்டுக்களை தேசிய பெறுமதிமிக்க விளையாட்டுக்களை மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் தேசிய மல்யுத்தத்தை சர்வதேசத்திற்கு அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் 1818 ஆம் ஆண்டு மல்யுத்த கலைக்கு தடைவிதித்தனர். அந்த தடை இன்னும் நீடிக்கின்றது.
மல்யுத்த சண்டை கலையை வளர்க்கும் அதன் ஊடாக பயிற்சிகளை வழங்கும் கலைஞர்களை கண்டுபிடித்து இந்த விளையாட்டுக்கு தேசிய மட்டத்தில் பயிற்சிகளை வழங்க நிலையங்களை ஏற்படுத்த எண்ணியுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவுக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனை!
சமுர்த்தி சௌபாக்கியா வேலைத்திட்டத்தினூடாக நல்லூர் பிரதேசத்தில் உதவித்திட்டம் வழங்கிவைப்பு!
எதிர்வரும் காலங்களில் நாட்டில் காணி நிலங்களின் விலைகள் குறைவடையும் -அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப...
|
|