தடைசெய்யப்பட்ட வலைகள் விற்ற கடை முற்றுகை; யாழ்ப்பாணத்தில் சம்பவம்!
Saturday, April 28th, 2018
யாழ்ப்பாணம் நகரத்தில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை விற்பனை செய்த வர்த்தக நிலையம் ஒன்று நேற்று முற்றுகையிடப்பட்டது. கடற்படை, சிறப்பு அதிரடிப்படை, நீரியல் வளத்துறை ஆகியோரே வர்த்தக நிலையத்தை முற்றுகையிட்டு வலைகளைக் கைப்பற்றினர்.
முற்றுகையின்போது கடையிலிருந்த ஆயிரத்து 500 கிலோவுக்கு மேற்பட்ட தங்கூசி வலைகள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் பெறுமதி 20 இலட்சம் ரூபாவுக்கு அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டது. கடையில் களஞ்சியப்படுத்தியிருந்த வலைகளே கைப்பற்றப்பட்டன. சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
இலங்கை - அமெரிக்க படைகளுக்கிடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடல்!
மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் - ஈ.பி.டி.பியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக செயலாளர் ஜெயராஜ்!
மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களை சந்திக்கும் தேர்தல் ஆணைக்குழு!
|
|
|


