தடுப்பூசியை தனியார் பிரிவினரும் இறக்குமதி செய்ய அனுமதியளிக்க வேண்டும் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் கோரிக்கை!
Thursday, March 18th, 2021
தனியார் பிரிவினருக்கும் கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதியளிக்க வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் கொரோனா நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்படுகின்றமையால், அடுத்த கட்டமாக தொழில் செய்யும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் விசேடமாக ஆடை தொழிற்சாலைகளில் அதிகமாக பதிவாகின்றனர் என்பதால், தொழில் செய்யும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த தடுப்பூசியை அரசாங்கத்தினால் தற்போது வழங்க முடியாவிட்டால் தனியார் பிரிவினருக்கும் இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.
000
Related posts:
|
|
|


