ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் தொகை அதிகரிப்பு!

Sunday, July 9th, 2017

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்படும் பல்வேறு அபிவிருத்திக்கான நிதியுதவி இவ்வருடத்தில் இருந்து இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திருமதி .ஸ்ரீ விடோவதிக்கும்  நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்குமிடையிலான சந்திப்பின் போது இந்த விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வங்கி வழங்கும் கடன் முக்கிய நடைமுறை இரண்டு ஒன்றிணைக்கப்பட்டதன் பெறுபேறாக இந்த வருடத்திலிருந்து இலங்கைக்கு வருடாந்தம் 80 முதல்; 100 கோடி அமெரிக்க டொலர்கள் கடன் நிதியுதவி கிடைக்க உள்ளது.ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வழங்கும் நிதியுதவி தொடர்பில் அவர் அமைச்சருடன் விரிவாக பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இலங்கை அரசாங்கம் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஆசிய அபிவித்திவங்கி தொடர்ந்தும் நிதியுதவி வழங்குமென்றும் அவர் தெரிவித்தார்.

Related posts: