தடுப்பு முகாம்களில் வாழ்ந்த எம்மை தலைநிமிர்ந்து வாழவைத்தவர் டக்ளஸ் தேவானந்தா – மெலிஞ்சிமுனை கிராம தலைவர் லக்மன்!

Tuesday, January 30th, 2018

மெலிஞ்சிமுனை கிராமத்தை மீள் உருவாக்கி எமக்கான அடிப்படை வசதிகள் அனைத்தையும் பெற்றுத்தந்து இன்று நாம் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றிய பங்கு என்பதை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம் என மெலிஞ்சிமுனை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் லக்மன் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

மெலிஞ்சிமுனை கிராமத்தில் வாழ்ந்த நாம் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து வன்னியிலும் பிற இடங்களிலும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்துவந்தோம். இவ்வாறு வன்னியில் வாழ்ந்த நாம் இறுதி யுத்த காலப் பகுதியில் இடம்பெயர்ந்த நிலையில் நலன்புரி முகாம்களில் பல்வேறுபட்ட அசௌகரியங்களுடன் வாழ்ந்து வந்தபோது எம்மை சந்திக்க நேரில் வருகைதந்து ஆறுதல் கூறியிருந்தவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே.

அதுமாத்திரமன்றி மீளவும் நாம் இந்தப் பகுதியில் வந்து மீளக் குடியேறுவதற்கு அர்ப்பணிப்புகளுடனான பங்களிப்புக்களை வழங்கியதுடன் எமது குடியிருப்புக்கான வீதிகளை அமைத்தது மட்டுமன்றி மின்சாரம் குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளையும் நிவர்த்தி செய்து பெரும்பணிகளை ஆற்றியுள்ளார்.

அந்தவகையில் எமது ஆயுள்க் காலம் வரையில் டக்ளஸ் தேவானந்தாவின் அரும்பணிகளை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம் என்று தெரிவித்த கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் இந்த கிராமத்தில் இன்னும் பல தேவைப்பாடுகள் குறிப்பாக வீதிப்புனரைமப்பு குடிநீர் வசதித் திட்டம் முழுமையாக்குதல் துறைமுக வீதிப் புனரமைப்பு, குளப் புனரமைப்பு வேலைவாய்ப்பு வாழ்வாதாரம், அரச காணிகளை காணிகளில்லாதவர்களுக்கு பகிர்ந்தளித்தல் போன்ற பல்வேறு தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்யவேண்டிய தேவைப்பாடுகள் உள்ளது.

எமது தேவைகளை நிவர்த்திசெய்வதற்கு வேறு எந்தத் தமிழ் அரசியல் தலைமைகளாலும் இயலாது என்பதுடன் ஏனையவர்களிடம் அதற்கான ஆற்றலோ அக்கறையோ இல்லை என்பதையும் நாம் உணர்ந்துகொண்டுள்ளோம்.

எனவே தான் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஒருமித்த முடிவாக நாம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்து அதன் வெற்றியை உறுதி செய்வோம் என்றும் லக்மன் தெரிவித்தார்.

Related posts: