தங்க விருதை வென்றது இலங்கை விமானப்படை!

201ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் தங்கவிருதினை இலங்கை விமானப்படை பெற்றுக்கொண்டுள்ளது.
பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் கீழ் நிறுவப்பட்டுள்ள தேசிய உற்பத்தித்திறன்களுக்கான செயலகத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் விருது வழங்கும் விழா இரத்மலானை ஸ்டைன் மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படை அதிகாரிகளின் பிரதானி எயர் வைஸ் மார்ஷல் டி.எல்.எஸ்.டயஸ் ஜனாதிபதியிடமிருந்து வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் விமானப்படையின் பல நிலையங்கள் மற்றும் அமைப்புக்கள் என்பன பொறியியல், பயிற்சிகள், ஆய்வும் அபிவிருத்தியும் மற்றும் நலன்புரிசேவைகள் உள்ளடங்கலான பல துறைகளில் உற்பத்தித்திறன் தொடர்பான மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்பட்டதாக இலங்கை விமானப்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
பேண்தகு எதிர்காலத்தை அடைதல் இலங்கையினதும் பிரதான குறிக்கோள் – ஜனாதிபதி!
அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் - பிரான்ஸ் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஈர்ப்பிற்கான அமைச்சர் ச...
ரஷ்யா - உக்ரைன் யுத்தம் - நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் அவசரமாக கூடுகிறது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்!
|
|