தகவல்களை வழங்க மறுக்கும் அரச ஊழியர்களுக்கு எதிராக தாபன விதிக்கோவையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் – வடக்கிலுள்ள அரச ஊழியர்களுக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளர் எச்சரிக்கை!
Wednesday, December 9th, 2020
ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் அரச ஊழியர்களின் தகவல்களை வழங்குமாறு கோரி வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ. பத்திநாதனால் வட மாகாண சபைக்குட்பட்ட திணைக்களங்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில், வடக்கு மாகாண சபைக்குட்பட்ட அரச திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் தமது பணிக்கு புறம்பாக பகுதிநேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ ஊடக நிறுவனம் ஒன்றில் செய்தியாளராகவோ, அறிவிப்பாளராகவோ, ஆசிரியராகவோ பணிபுரியும் பட்சத்தில் அவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறும்,
தகவல்களை வழங்க மறுப்பவர்களிற்கு எதிராக தாபன விதிக்கோவையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தொடருந்து பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு: அரச பேருந்துகள் சேவையில்!
தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட மூன்று நினைவு முத்திரைகள் பிரதமரிடம் வழங்கி வைப்பு!
சர்வதேச தரத்திலான மருத்துவ வசதிகளை வழங்க யாழ் நகரில் நெரிசலற்ற சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் – யாழ்.ப...
|
|
|


