டொலர் பற்றாக்குறையே அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமைக்கு காரணம் – மத்தியவங்கி ஆளுநர் தெரிவிப்பு!
 Tuesday, September 21st, 2021
        
                    Tuesday, September 21st, 2021
            
வெளிநாடுகளிலிருந்து அத்தியாவசிய பொருட்களையும் சமையல் எரிவாயுவினையும் இறக்குமதி செய்ய முடியாதமைக்கு டொலர் பற்றாக்குறையே காரணம் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசியல் இலாபம் கருதியே அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் விமர்சனங்களை மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர், பல்வேறு இன்னல்களையும் சவால்களையும் எதிர்கொண்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தில் அரசியல் செய்ய வேண்டிய தேவை இலங்கைக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிக்கும் பட்சத்தில் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிவாயு விலை அதிகரிப்பு உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றும் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் காணப்படுகின்ற அனைத்து பொருளாதார பிரச்சினைகளுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம்முதல் அடுத்த 6 மாத காலத்திற்கு தீர்வுகள் முன்வைக்கப்படும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        