சீனா- இந்தியாவுக்கு விசேட பொருளாதார வலயங்கள்!

Wednesday, July 27th, 2016

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இலங்கையில் விசேட பொருளாதார வலயங்கள் அமைத்துக் கொடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச வர்த்தக மற்றும் பொருளாதார தந்திரோபாய அமைச்சர் மலிக் சமரவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார்.


மருந்துப்பொருள் மற்றும் வாகன உதிரிபாக் கைத்தொழில் நடவடிக்கைகளை இந்தியா இந்த பொருளாதார வலயத்தில் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹம்பாந்தோட்டையில் சீனா சுமார் 15000 ஏக்கர் காணியை ஒதுக்கீடு செய்து அதில் பொருளாதார வலயமொன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இந்த திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டால் பாரியளவில் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெளிநாட்டு தொழில் நிபுணர்கள் இலங்கையில் தொழில்களில் ஈடுபட அனுமதிக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுடனான பொருளாதார உடன்படிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்தள்ளார்.

Related posts:


வெளிநாட்டு முதலீடுகளுக்கு வசதிகளைச் செய்வதற்காக முதலீட்டு முகாமைத்துவ குழுவை நியமிக்க அரசாங்கம் தீர்...
வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் ஆளணி பற்றாக்குறை - மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சத்தியம...
நியமனம் வழங்கப்படாதுள்ள பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கு எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதிக்கு ம...