டொலருக்கு எதிராக முதன் முறையாக பாரிய வீழ்ச்சியை சந்தித்த ரூபா!
Thursday, February 8th, 2018
அமெரிக்க டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை இலங்கை ரூபாய் சந்தித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய பண பரிமாற்ற விகித மதிப்புகளுக்கமைய முதன் முறையாக அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 156ரூபாவை கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் 156.13 ரூபாய் வரை டொலர் பெறுமதி அதிகரித்து காணப்பட்டுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை கடந்த பெப்ரவரி மாதம் 2ஆம்திகதி 155.94 ரூபாயாகக் காணப்பட்டுள்ளது.
இந்த வீழ்ச்சிக்கான காரணம் நாட்டிலுள்ள முதலீட்டாளர்களுக்கான டொலர் தேவை அதிகரித்தமையே என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
பிரதமர் ரணில் ஜேர்மன் பயணத்திம்!
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து!
அனைத்து மது உற்பத்தி நிறுவனங்களையும் CCTV கமெராக்கள் மூலம் மதுவரி திணைக்களத்துடன் இணைக்க நடவடிக்கை ...
|
|
|


