டெல்டா காரணமாக சிறுவர் தொற்றாளர் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண சுட்டிக்காட்டு!
 Friday, August 13th, 2021
        
                    Friday, August 13th, 2021
            
கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையில் சுமார் 152 சிறுவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
டெல்டா பிறழ்வு வைரஸ் பரவலால் சிறுவர்கள் பாதிக்கப்படும் நிகழ்வு மிக அதிகமாக உள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் 2 முதல் 14 வரையான சிறுவர்களை வீட்டில் வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிறுவர் மருத்துவமனையின் பரிசோதனை சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
2 வாரங்களில் அரச உத்தியோகத்தர்களுக்கு வாகன உறுதிப்பத்திரங்கள்!
டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி!
கரைநகர் கடற் பரப்பில் சட்ட விரோத கடற் றொழிலில்  ஈடுபட்ட இந்திய றோலர் மீன்பிடிப் படகுடன் 6 பேர் கடற்ப...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        