கரைநகர் கடற் பரப்பில் சட்ட விரோத கடற் றொழிலில் ஈடுபட்ட இந்திய றோலர் மீன்பிடிப் படகுடன் 6 பேர் கடற்படையினரால் கைது!

Monday, July 11th, 2022

கரைநகர் கடற் பரப்பில் சட்ட விரோதமான தொழில் முறையைப் பயன்படுத்தி, மீன் பிடித்துக் கெ்ண்டிருந்த இந்திய றோலர் மீன்பிடிப் படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன், 6 இந்தியக் கடற்றொழிலாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துமீறி இலங்கை கடல் பரப்பில் நுழைந்து கடல் வளத்தை அழிக்கும் தொழில் முறையான இழுவைமடித் தொழிலில் ஈடுபடுகின்ற வெளிநாட்டு கலன்கள் அனைத்துக்கு எதிராகவும் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இலங்கை கடற் படையினருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இன்றைய தினமும் ஒரு படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட படகு மற்றும் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை, நாளை மயிலிட்டித் துறைமுகத்தில் வைத்து பொறுப்பேற்கவுள்ள கடற்றொழிர் மற்றும் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளமை குறிப்பத்தக்கது.

Related posts: