டெங்கு நோய் வைரஸ் வீரியமிக்கதாக காணப்படுகின்றது
Friday, June 16th, 2017
டெங்கு நோய் காரணியான வைரஸ் வீரியமிக்கதாக காணப்படுகின்றது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த நுண்ணுயிர் நுளம்புகள் மூலம் டெங்கு நோய் தீவிரமாக பரவுவதை தடுக்க சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம்;. நோயை தடுப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட தடுப்பு மருந்து இன்னமும் வெற்றிகரமான பெறுபேறுகளை தரவில்லையென்றும் அவர் தெரிவித்தார்.
டெங்கு ஒழிப்பு ஜனாதிபதி செயலணி நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடுகின்றது.
இந்த வருடத்தில் நாடெங்கிலும் 62 ஆயிரம் டெங்கு நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 155 என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது..
Related posts:
அமரர் குமாரசாமியின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!
சர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக 51 முறைப்பாடுகள்!
எதிர்வரும் ஆண்டில் அரசாங்க சேவையில் புதிதாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது - திரைசேரியின் செயலா...
|
|
|


