டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு – டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் எச்சரிக்கை!
Friday, February 18th, 2022
நாட்டில் தற்போது டெங்கு பரவும் அபாயம் இல்லாத போதிலும், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது என டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் வைத்தியர் ஷிலந்தி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அனைத்து வகையான நுளம்புகள் பெருகும் இடங்கள் குறித்தும் அவதானமாக இருக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், டெங்கு நோயை தடுக்கும் வகையில் அவற்றை அழிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 801 டெங்கு நோயாளர்களும், ஜனவரி மாதத்தில் 7 ஆயிரத்து 702 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உயிர்நீத்தவர்களுக்கு ஓமந்தை நினைவுத்தூபி அமைக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு விரைவில் அமைச்ச...
நாட்டு நிலைமைகள் குறித்து பிரதமரின் விசேட உரை இன்று!
மட்டக்களப்பு மாவட எல்லை நிர்ணயம் குறித்து விசேட கலந்துரையாடல்!
|
|
|


