டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்: இலங்கை மக்களுக்கு மற்றும் ஓர் அபாய எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு!

Thursday, May 21st, 2020

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிவரை டெங்கு தொற்று காரணமாக 19 ஆயிரத்து 446 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு கடந்த ஏப்ரல் மாதம் மாத்திரம் 463 டெங்கு தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் தற்போது நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் மழைக்காரணமாக டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: