டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Thursday, May 16th, 2019
கடந்த வாரங்களாக சில மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு ஒழிப்பு விசேட துறை ரீதியான வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்படும் நிலையில், யாழ்ப்பாணம், குருணாகல் மற்றும் கேகாலை மாவட்டங்களில் டெங்கு நுளம்பு பரவுக்கூடிய 30க்கும் அதிகமான இடங்கள் காணப்படுவதாக குறித்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும், பாடசாலைகளில் 48 சதவீதமளவில் டெங்கு நுளம்பு பரவுவதற்கான ஏதுவானநிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
நீதிபதிகளின் சம்பளங்கள் உயர்வு!
களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு மேலும் 10 ஆயிரம் மெட்றிக் தொன் டீசல் - கனியவளக் கூட்டுத்தாபனம்...
பச்சை குத்தியவர்களிடமிருந்து இரத்தம் எடுக்கப்பட மாட்டாது - தேசிய இரத்த மாற்று சேவையின் பணிப்பாளர் தெ...
|
|
|


