டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் தகவல்!
Sunday, May 29th, 2022
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இந்த வருடம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடத்தில் மொத்தமாக 24 ஆயிரத்து 942 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
எனினும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23 ஆயிரத்து 118 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மக்களை மறந்தமையினால்தான் ஐ.தே.க.வுக்கு இத்தகைய பரிதாப நிலை ஏற்பட்டது - அக்கட்சியின் முன்னாள் நாடாளும...
மட்டுப்படுத்தப்பட்ட முறையில் மத வழிபாடுகளில் ஈடுபடுங்கள் - சுகாதார அமைச்சு வேண்டுகோள்!
மக்கள் விடுதலை முன்னணி போன்ற குழுக்களுக்கு அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை பற்...
|
|
|


