டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்12 மாவட்டங்களில் அமுலாகின்றது!
Friday, May 19th, 2017
நாட்டில் கூடுதலான டெங்கு நோயாளிகள் அடையாளங்காணப்பட்ட 12 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்கள் அமுலாக்கப்பட்டுள்ளது.
டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது சுகாதார அமைச்சின் நோக்கமாகும். இதற்கு அமைவாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை இந்த வேலைத்திட்டம் அமுலாகும். இந்தப்பணியில் ஆயிரத்து 800க்கும் அதிகமான அதிகாரிகள் ஈடுபடுகின்றனர்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல் மட்டக்களப்பு, திருகொணமலை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத் திட்டம் அமுலாகிறது. இதுவரை 47 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளார்கள்.
Related posts:
அரச நிறுவனங்கள் அனைத்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - ஜனாதிபதி
உள்நாட்டு கைத்தொழிலாளர்களை பாதிக்கும் எந்தவொரு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படாது - ஜனாதிபதி!
19 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு - பிரதமர் மஹிந்த ராஜபக்ச ...
|
|
|


