டெங்கு ஒழிப்பு தொடர்பான 2ஆம் கட்ட நடவடிக்கை இன்று ஆரம்பம்!

நாம் தொடங்குவோம், டெங்குவை ஒழிப்போம், தேசிய முன்முயற்சியில் இணைவோம் என்ற கூட்டு ஊடகத் திட்டத்தின் இரண்டாவது கட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் சகல அரச நிறுவன வளாகங்களிலும் சுத்தப்படுத்தல் நடவடிக்கை இடம்பெறும். முற்பகல் பத்து மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரையிலும் சகல வானொலி, தொலைக்காட்சி சேவைகள் ஊடாக இந்த நடவடிக்கை நேரடியாக ஒலி மற்றும் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
டெங்கு ஆட்கொல்லியை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின் வழிகாட்டலுடன் நிதி மற்றும் ஊடக அமைச்சும், அரசாங்க தகவல் திணைக்களமும் கூட்டு ஊடகத் திட்டத்தை அமுலாக்குகின்றது
இதனூடாக ஊடக நிறுவனங்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த பாடுபடும். இந்தத் திட்டத்தின் முதற்கட்டம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்மூலம் சாதகமான மாற்றம் ஏற்பட்டதாக ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதுடன் கடல் வளங்களையும் அழிப்பதை கட்டுப்ப...
இன்று முதல் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை -வளிமண்டலவியல் திணைக்களம் !
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகளில் தலையிட்ட அமைச்சர்கள் யார் –அதிர்ச்சித் தகவல்கள் கூறிய ஜனாதிபத...
|
|
சீனாவிடமிருந்து இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகள் - தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் சீ...
சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கையில் ஆபத்தான அதிகரிப்பு - சிறுநீரக மருத்துவர் அனுர ஹேவகீகன எச்சரிக்கை!
COP - 28 மாநாட்டின் இணக்கப்பாடுகள் மற்றும் உடன்படிக்கைகளை விரைவாக அமுல்படுத்தும் வேலைத்திட்டத்தைத் ...