டெங்குவின் புதிய திரிபு குறித்து பொதுமக்களுக்கு வைத்தியர் சந்திம ஜீவந்தர எச்சரிக்கை !

Thursday, May 4th, 2023

புதிய டெங்கு காய்ச்சலால் எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் சிறுவர்களுக்கான டெங்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் டெங்குவிற்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டால் இந்தத் தகவல்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் எனவும் பேராசிரியர் கலாநிதி சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களை கட்டுப்படுத்த டெங்கு செயலணியை செயற்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மேல் மாகாண ஆளுநர், பிரதம செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

குமுதினி படகு படுகொலையின் போது மரணித்த உறவுகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!
அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக மீனவர்களின் விளக்கமறியல் பெப்ரவ...
சுமந்திரனே தமிழரசின் தலைவராக வாய்ப்பு - சிறிதரன் பின்வாங்குவார் – ஈ.பி.டி.பி ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவி...

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தால் கட்டுப்பாடுகளை மீண்டும் இறுக்கமாக்க நேரிடும் - சுகாதார அமை...
500 ரூபாயை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் சார்ஜன்ட்டுக்கு 4 வருட கடூழிய சிறை - கொழும்பு பிரதான நீதவான் நீதிமன...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - மைத்திரிபால சிறிசேனவின் வாக்குமூலத்தை விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்கு...