டில்லிக்கு அழைக்கப்படும் இலங்கையின் புதிய ஜனாதிபதி – பாரத பிரதமர் மோடியின் செய்தியுடன் இலங்கை வருகிறார் ஜெய்சங்கர்!

Thursday, October 3rd, 2024

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நாளை வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 4 ஆம் திகதி) இலங்கை வரவுள்ளார்.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னர் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், இந்நாட்டுக்கு வரும் முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரி இவராவார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட புதிய அரச தரப்பினருடனும், தமிழ், முஸ்லிம் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடனும் மற்றும் சிவில் சமூகத்தினருடனும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது டில்லி வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை, ஜனாதிபதி அநுரகுமாரவிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அரசாங்கத்துடன் இணைய முன்வருபவர்களுக்கு எனது அமைச்சை வழங்கத் தயார் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்...
நீர்ப்பாசனத் துறை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட கலந்துரையாடல்!
கஜீமாவத்தை தீ விபத்தில் 80 வீடுகள் தீக்கிரை - 220 பேர் இடம்பெயர்வு – பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான...

எந்தவொரு மாணவருக்கும் சலுகை மறுக்கப்பட மாட்டாது - மஹாபொல திட்டம் குறித்துபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக...
ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது - உயர் நீதிமன்றம் வியாக்கிய...
10 பேர்ச்சஸ்ஸூக்கும் அதிகமான வீட்டுத் தோட்டங்களுக்கு 2 இலட்சம் - விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் ப...