டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக முயற்சி – கல்வி அமைச்சு !

Tuesday, October 31st, 2017

கல்விப் பொதுத்தராதரப்பத்திர உயர்தரத்தில் சித்தியெய்திய மற்றும் டிப்ளோமா பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

நிலவும் வெற்றிடங்களுக்கமைய தரம் 6 முதல் 11 வரையான வகுப்புகளுக்கான நியமனங்கள் இதனூடாக வழங்க எதிர்பார்க்கப்படுவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த பிரேமதிலக தெரிவித்தார் இதனடிப்படையில் 6686 ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் தட்டுப்பாட்டிற்கேற்ப இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இவ்வாறு ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

1969 வெற்றிடங்கள் தற்போது கிழக்கு மாகாணத்தில் நிலவுவதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.இதேவேளை தென் மாகாணத்தில் 1068 வெற்றிடங்கள் நிலவுகின்றன.

மத்திய மாகாணத்தில் சிங்கள தமிழ் மொழி மூலங்களில் 884 வெற்றிடங்கள் நிலவுவதுடன் தரம் 6 முதல் 11 வரை இந்த வெற்றிடங்கள் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.மேல் மாகாணத்தில் சிங்கள மொழி மூல ஆசிரியர்கள் 342 பேருக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

புதிய ஆசிரிய நியமனங்களுக்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதுடன் வர்த்தமானி அறிவித்தல் அனுமதிக்காக மீளவும் ஆணைக்குழுவுக்கு அது அனுப்பப்பட்டுள்ளது. இதேவேளை புதிய நியமனங்களை விரைவில் வழங்குவதற்கு உரிய வர்த்தமானி அறிவித்தலை பிரசுரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: