டிஜிட்டெல் தொழில் நுட்பம் மூலம் கர்ப்பிணிப் பெண்களுக்கான போஷாக்கு கொடுப்பனவு!
Wednesday, July 12th, 2017
கர்ப்பிணிப் பெண்களுக்கான போஷாக்குக் கொடுப்பனவு டிஜிட்டெல் முறைமை ஊடாக வழங்கப்படவுள்ளது.அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு போஷாக்குக் கொடுப்பனவு வழங்கும் செயற்றிட்டம் எதிர்காலத்தில் கர்ப்பிணித் தாய்மாரின் கையடக்கத் தொலைபேசி ஊடாக பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் ஊடாக 20 ஆயிரம் ரூபாய் போஷாக்குக் கொடுப்பனவு கிடைக்கப் பெறும்.
இந்தத் திட்டம் மாதாந்தம் இரண்டாயிரம் ரூபாய் வீதம் பெற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது. இதற்கு முன்னர் அவர்கள் பிரதேச செயலகம் ஊடாக பெற வேண்டியிருந்தது. எனவே, அதனை இலகுபடுத்துமுகமாக கையடக்கத் தொலைபேசி மூலம் குறித்த தொகைக்கான வவுச்சரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
எரிபொருள் மற்றும் மின்சார பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சர் ஒருவர் அவசியம் - பொதுப் பயன்பாடுகள் ...
சட்டம் மற்றும் அமைதி என்பன சகல மக்களுக்காகவே பாதுகாக்கப்படுகின்றது - பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறு...
பெரிய வெங்காயத்தின் விலை மேலும் குறைவடையும் - இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு!
|
|
|


