சட்டம் மற்றும் அமைதி என்பன சகல மக்களுக்காகவே பாதுகாக்கப்படுகின்றது – பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்து!
Tuesday, August 2nd, 2022
சட்டம் மற்றும் அமைதி என்பன சகல மக்களுக்காகவே பாதுகாக்கப்படுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது.
மேலும் இளைஞர் யுவதிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதற்கு தயார் எனவும் அதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சர்வதேச கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அவசரகால சட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் வெவ்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர். எனினும் அவர்களுடன் சிறந்த நட்புடணர்வுடன் அரசாங்கம் செயற்படுகிறது.
எனவே, இந்த நிலை தொடர்ந்து செல்லாது என நம்பப்படுவதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
எரிபொருள் குழாய் கட்டமைப்பு செயலிழப்பு: நட்டத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலையீட்டால் பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந...
ஒரே இலக்கத்தில் இரு வாகனங்கள் - யாழ்ப்பாண விசாரணை பிரிவில் முறைப்பாடு!
|
|
|


