டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக தொடர்பாடல்களை வலுப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!

Sunday, May 7th, 2023

இளையோரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலான கல்வி மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு பொதுநலவாய அமைப்பு விரிவான திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்வில் கருத்துரைத்த போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக தொடர்பாடல்களை வலுப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

கொரோனாவுக்கு மத்தியிலும் 2021 ஆம் ஆண்டில் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி துறையின் இலக்கை வெற்றிகண...
பரவி வரும் இன்புளுவென்சா உள்ளிட்ட வைரஸ் தொற்றுக்களுக்கு, வைத்திய ஆலோசனையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகள...
வாள்வெட்டுத் தாக்குதல் - கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் 13 பேர் பலி - 983 பேர் யாழ்.போதனா வைத்தியசாலைய...