டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக தொடர்பாடல்களை வலுப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!
Sunday, May 7th, 2023
இளையோரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலான கல்வி மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு பொதுநலவாய அமைப்பு விரிவான திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்வில் கருத்துரைத்த போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக தொடர்பாடல்களை வலுப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 29 பேர் மீளவும் விளக்கமறியலில்!
பகல் நேரங்களில் மணல் கொண்டு செல்வதை நிறுத்த நடவடிக்கை!
2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கியது அரச நிதி பற்றியக் குழு!
|
|
|


