நெசவுப் பாடசாலைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Tuesday, June 21st, 2016

யாழ்ப்பாணம் மாவட்ட அரசினர் நெசவுப் பயிற்சிப் பாடசாலையில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஆண், பெண் ஆகிய இருபாலாரிடமிருந்தும் கோரப்பட்டுள்ளன.

இந்தக் கற்கைநெறிக்கு 6 மாதகாலம் மற்றும் 1 வருட காலம் என்று இரண்டு பிரிவுகளின் அடிப்படையில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளனர்.

ஒரு வருட கற்கை நெறியைப் பயிலுவதற்கு, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் கணிதம் உட்பட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல் அவசியம் என்றும் 6 மாத கால கற்கைநெறியைப் பயிலுவதற்கு தரம் 8இல் சித்தியடைந்திருத்தல் அவசியம் என்றும் பயிற்சிக் காலத்தில் மேலதிக ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த நெசவுப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தத்தமது விண்ணப்பங்களை ‘அரசினர் நெசவுப் பயிற்சிப் பாடசாலை, கந்தமடம் சந்தி, நல்லூர், யாழ்ப்பாணம்’ என்ற முகவரிக்கு எதிர்வரும் 24ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டள்ளனர்.

Related posts: