டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை துரிதமாக வெளியிட நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவிப்பு!
Sunday, May 28th, 2023
டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை உடனடியாக வெளியிட தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் நடமாடும் சேவையில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொழிநுட்ப அமைச்சுடன் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
1,20,000 மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு!
இந்த ஆண்டுக்கான பாதீடு நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு: வெளியானது முக்கிய அம்சங்கள்!
உயர்தரப் பரீட்சைக்கான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவுமுதல் தடை!
|
|
|


