டாக்டர் அப்துல் கலாமின் உருவச்சிலை நாளை யாழில் திறப்பு!

Thursday, June 16th, 2016

யாழ்ப்பாண நூலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மறைந்த இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் உருவச்சிலை நாளை திரைநீக்கம் செய்து வைக்கப்படவுள்ளது.

டாக்டர் அப்துல் கலாம் 2012 ஆம் ஆண்டு ஜனவரிமாதம் 22 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்ததை நினைவுகூரும் முகமாக அவரது உருவச்சிலை யாழ்.நூல் நிலைய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

தமிழகம் இராமேஸ்வரத்தில் 1931 ஒக்ரோபர் 15 ஆம் திகதி பிறந்த டாக்டர் அப்துல் கலாம் 2015 ஜுலை 27 ஆம் திகதி 84 வயதில்  உயிர்நீத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: