டயகம சிறுமி தற்கொலை செய்துகொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிப்பு!
Sunday, July 25th, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் வீட்டில் டயகம சிறுமி தற்கொலை செய்துகொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் எவையுமில்லை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
சிறுமி தனக்கு என்ன நடந்தது என்பது குறித்து எந்த வாக்குமூலத்தையும் வழங்கவில்லை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் முடித்த விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
இன்னொரு நபரே என்ன நடந்தது என வாக்குமூலம் வழங்கினார் என மருத்துவர்களே குறிப்பிட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சிறுமி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது நிபுணர்களின் ஆதாரங்களை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
புதுப்பித்தல் காரணமாக கட்டுநாயக விமான நிலைய பயண நேரங்களில் மாற்றம்!
நாடாளுமன்ற தேர்தல் கடமையில் 69 ஆயிரம் விசேட பொலிஸ் அதிகாரிகள் கடமை!
பாடசாலை மாணவர்களிடையே 100 பேரில் 10 பேர் நீரிழிவு போன்ற நோய்களால் பாதிப்பு - அமைச்சர் டலஸ் அழகப்பெர...
|
|
|


